கீழையூர் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :3287 days ago
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவின் நான்காம் நாளாக நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை‚ விக்னேஷ்வர பூஜை‚ புண்யாகவாசனம்‚ கலசஸ்தாபனம்‚ பிரகன்நாயகி அம்பிகை ஆவாகணம் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம்‚ உற்சவ மூர்த்தி பராசக்தி அம்பிகை வைஷ்ணவி அலங்காரத்தில்‚ அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 7:00 மணிக்கு லலிதா சகஸ்ர நாமார்ச்சனை‚ சோடசோபவுபச்சார மகா தீபாராதனை‚ சதுர்வேத மற்றும் புஷ்பராகம் இசைக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.