மழை வேண்டி வருண ஜெபம்
ADDED :3287 days ago
சின்னமனுார், முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழையில்லாததால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய வேண்டி பொதுப்பணித்துறை சார்பில் வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றில் வருண ஜெபம் நடந்தது. செயற்பொறியாளர் முத்துபாண்டி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் குமார், மொக்கை மாயன் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர்கள் புவனேஸ்வரி, ராஜகோபால், தண்டபாணி, சின்னமனுார் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி நல்லையம் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவுமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.