உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கமேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா

சங்கமேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா

பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. வரும், 11ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பவானி, வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவிலில், நவராத்திரி உற்சவ விழா வேதநாயகி அம்மன் சன்னதியில் கடந்த, 1ம் தேதி தொடங்கி வரும், 11ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் காலை, 11:00 மணிக்கு வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், தீபாராதனை, மாலை, 6:00 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் ஊஞ்சல் உற்சவம் உபயதாரர்கள் மூலமாக நடைபெறுகிறது. கடைசி நாளான, 11ம் தேதி விஜயதசமி அன்று 108 சங்குகள் பூஜை, ஹோமங்கள் மிக சிறப்பான முறையில் நடைபெற்று விழா முடிவு பெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !