பெண்கள் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்வது கட்டாயமா?
ADDED :3327 days ago
இப்படியெல்லாம் கேட்கும்படியாக காலம் மாறி விட்டது. ஒரு குடும்பத்தின் மங்களமே சுமங்கலிப் பெண்கள் தான். அவர்களின் மங்களச் சின்னமே பொட்டும், பூவும். இதனைக் காப்பாற்றிக் கொள்ள அதாவது கணவன் ஆரோக்கியத்துடன் இருக்க எத்தனை பெண்கள் தவமிருக்கிறார்கள்... நாகரிகத்தால் சில பெண்கள் செய்யும் தவறுகள் இது போன்ற கேள்விகளுக்கு இடமளிக்கிறது. பெண்கள் கட்டாயம் திலகம் இட்டுக் கொண்டு தான் ஆக வேண்டும்.