சரஸ்வதி பூஜை உற்சவம்
ADDED :3326 days ago
கீழக்கரை: கீழக்கரை, தட்டார் தெருவில் உள்ள உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் விஜயதசமி நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. கோயிலில் நடந்த சரஸ்வதி வித்யா பூஜையில் பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளி பாடினர். அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாங்கல்ய பூஜைகளும் நடந்தன. ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம் வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.