உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழா

நவராத்திரி விழா

கீழக்கரை : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஐயப்பன், மஞ்சமாதா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 10 படிகள் கொண்ட மெகா கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு, அஷ்டலட்சுமி பூஜைகள் நடந்தது. பள்ளி மாணவர்களின் பட்டிமன்றம், பல்சுவை இசை நிகழ்ச்சிகள் நடந்தது. முதல் நாளிலில் சண்டிகா பரமேஸ்வரி அம்மன், தொடர்ந்து வராஹி, கன்னிகா பரமேஸ்வரி, கனக மகா சந்தான லெட்சுமி, பத்மாவதி, உமாமகேஸ்வரி, சியாமளா தேவி, சாமுண்டீஸ்வரி, ஸ்ரீவித்யா, சரஸ்வதி என ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரங்களில் அம்மன் காட்சியருளுகிறார். விஜயதசமியன்று அம்பாள் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடக்கும். ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !