உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழா நிறைவு

நவராத்திரி விழா நிறைவு

திருப்பூர்: நவராத்திரி விழா நிறைவையொட்டி, விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமியும்; வெள்ளை குதிரையில் வீரராகவப் பெருமாளும், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.,திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், வீரராகப் பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில் உட்பட, பல்வேறு கோவில்களிலும், நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விஸ்வேஸ்வரர், வீரராகப் பெருமாள் கோவில்களில், நவராத்திரியை முன்னிட்டு, கொலு வைத்து கொண்டாடப்பட்டது.

தினமும் மாலை, பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும், இசை, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விஸ்வேஸ்வரர் கோவிலில், விசாலாட்சி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் எழுத்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று, திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விசாலாட்சியுடன் சிறப்பு அலங்காரத்தில் விஸ்வேஸ்வர சுவாமி எழுந்தருளினார். வீரராகப்பெருமாள், வெள்ளை குதிரை வாகனத்தில், மேள, தாளத்துடன் புறப்பாடாகி, தேர்வீதிகளில் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நவராத்தி விழாவின் கடைசி நாளான நேற்று, வானவேடிக்கைகள் முழங்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கன்னிகா பரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !