உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானானந்தா தபோவனத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்

ஞானானந்தா தபோவனத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத் தில்‚ அம்பாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

திருக்கோவிலுார், ஞானானந்தா தபோவனத்தில், கடந்த 1ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. இதன் நிறைவு நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சுவாசினி, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு வித்யா ஆரம்பம், லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷே கம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

அம்பாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி, வன்னி மரத்தில் மறைந்திருக்கும் அசுரனை அம்பு எய்து வதம் செய்யும் வைபவம் நடந்தது. சுவாமி, கோவிலை வலம்வந்து சன்னதியை அடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தபோவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !