உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை சரஸ்வதி கோயிலில் ஏடுதுவக்கம்: பெற்றோர் ஆர்வம்

நெல்லை சரஸ்வதி கோயிலில் ஏடுதுவக்கம்: பெற்றோர் ஆர்வம்

திருநெல்வேலி : நெல்லையில் சரஸ்வதி கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என தனியாக திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிர்புறம் தனித்த கோயில் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலை தனியார் நிர்வகித்துவருகின்றனர். கல்விக்கு உகந்த நாளான விஜயதசமி நாளில், குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வியின் பாலபடத்தை கற்பித்தல் சிறப்பானதாகும். சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு கல்வியை கற்பித்தல் பணியை துவக்கினர். இதற்காக அரிசியில் குழந்தைகளின் விரல் பிடித்தும், மஞ்சள் துண்டு மூலமும் "அ..ஆ.." என தமிழின் முதல்எழுத்துக்கள் கற்றுத்தரப்பட்டன. குழந்தைகளின் கையில் தங்கத்தினால் ஆன ஊசியை கொடுத்தும் அரிசியில் எழுதி துவக்கினர். இதே போல திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆறுமுகநயினார் சன்னதியில் நடந்த நிகழ்ச்சியிலும் குழந்தைகளுக்கு பாலபாடம் கற்றுத்தரும் நிகழ்வு நடந்தது. இதில் திரளான பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !