அய்யனார் கோயிலில் வேண்டுதல் பொம்மை சிலை எடுப்பு திருவிழா!
ADDED :3394 days ago
திருமங்கலம்: திருமங்கலம் அருகே வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோயிலில், புராட்டசி பொங்கல் திருவிழா நடந்தது. திருமங்கலம் பகுதி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இத்திருவிழாவில், தாங்கள் வேண்டி கொண்டது நிறைவேறினால், அதனை பொம்மைய õக செய்து ஊர்வலமாக எடுத்துவந்து கோயிலில் வைத்து வழிபடுவது வழக்கம். ராணுவவீரர், போலீஸ், அரசியல்வாதி, வாத்தியார் என வேலைக்காகவும், குழந்தை வரம் வேண்டியவர்கள் குழந்தை பொம்மைகளையும், கார், டிராக்டர் வாங்க வேண்டும் என வேண்டியவர்கள் கார் பொம்மைகளையும் செய்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.