உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதுகாப்பற்ற நிலையில் சுவாமி சிலைகள்!

பாதுகாப்பற்ற நிலையில் சுவாமி சிலைகள்!

திருவாடானை: திருவாடானை அருகே மீட்கப்பட்ட சுவாமி சிலைகள், தாலுகா அலுவலகத்தின் வெளியே பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கண்மாய் துார்வாரும் பணியின் போது மண்ணுக்குள் புதைந்து கிடந்த 5 ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இவை திருவாடானை தாலுகா அலுவலக அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. முள்ளிமுனை, சோலியக்குடி, தொண்டி கடற்கரை பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட கல்சிலைகள் மீட்கப்பட்டு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இவற்றை வைக்க அலுவலக அறைக்குள் இடவசதி இல்லாததால் வெளியே பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறுகையில்,“ அரிய வகை சுவாமி சிலைகள் தெருவில் கிடப்பது வேதனையாக உள்ளது. ஏதாவது ஒரு கோயிலில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றனர்.  தாலுகா அலுவலக ஊழியர்கள் கூறுகையில்,“ அலுவலக அறைக்குள் சுவாமி சிலைகள் வைக்க போதிய இடவசதி இல்லாததால் அலுவலகம் முன் வைக்கபட்டுள்ளது,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !