சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED :3323 days ago
சின்னசேலம் : தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வர ருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை நடந்தது. இதேபோல் சின்ன சேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமார தேவர் மடம் பழமலை நாதர், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில் களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.