முதல்வர் ஜெ., நலம் பெற வீரபாண்டியில் இன்று பால்குடம்
தேனி: முதல்வர் ஜெ., பூரண நலம்பெற வேண்டி தேனி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இன்று வீரபாண்டி கவுமாரியம்மனுக்கு கட்சியினர் பால்குடம், எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சிறப்பு பூஜையும் நடக்கிறது. மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., கூறுகையில், “முதல்வர் ஜெ., விரைவில் பரிபூரண உடல் நலம் பெற வேண்டும் என வீரபாண்டி கவுமாரியம்மனை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்த கடந்த வாரம் அ.தி.மு.க.வினர் கையில் காப்புக்கட்டி, காவி வேட்டி அணிந்து விரதம் இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை வீரபாண்டி ஆவின் பாலகம் அருகே கட்சியினர் ஏராளமானோர் திரண்டு, கவுமாரியம்மனுக்கு பால்குடம், அலகு குத்துதல், காவடி, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பின்னர் பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.இதில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள்,கட்சியின் துணை அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி, கூட்டுறவு பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்குபெற வேண்டுகிறேன்,”என்றார்.