சரநாராயண பெருமாள் கோவிலில் ஏக தின பிரம்மோற்சவம்!
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏக தின பிரம்மோற்சவம் நேற்று நடந்தது. அதையொட்டி, திருப்பதி திருமலையில் நடைபெறுவது போல், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. காலை 4:00 மணிக்கு சுப்ரபாதம், 4:30 மணிக்கு தோமாலை சேவை, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள் அம்ச வாகனத்திலும், 9:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 10:00 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், ௧1:00 மணிக்கு சேஷ வாகனத்திலும், 12:00 மணிக்கு கருட வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலித்தார். பிற்பகல் 3:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு யானை வாகன சேவை, மாலை 4:00 மணிக்கு சூர்ணோற்சவம், 5:00 மணிக்கு குதிரை வாகன சேவை, 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி, 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.