பூமி நீளா வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவ விழா
நாமக்கல்: பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவ விழா, கோலாகலமாக நடந்தது. நாமக்கல் அடுத்த என்.கொசவம்பட்டியில், பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்வச விழா நடந்தது. முன்னதாக, கடந்த, 6ல், கோவில் வீடுகளில் முளைப்பாரி விடப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம், மாலை, 4:30 மணிக்கு, பூமி நீள சமேத வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்திகளை, பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது. அன்று மாலை, 6:30 மணிக்கு, பெருமாள் கோவிலில் இருந்து, மாப்பிள்ளை அழைப்பு, முளைப்பாரிகளுடன், ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இரவு, 8:00 மணிக்கு நிச்சயதார்த்த விழா நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, திருமஞ்சனம், கங்கணம் கட்டுதல், மாலை மாற்றுதல், மாங்கல்ய தாரணம், தீபாராதனை, அபி ?ஷகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, காலை, 11:30 மணிக்கு, திருக்கல்யாண உற்றசவத்துக்கு மொய் எழுதுதல், தூதர் பூஜை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது. பகல், 12:30 மணிக்கு, பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்திகளை, பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.