உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழையூர் செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கீழையூர் செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர் செல்வ விநாயகர் கோவிலில் முதல்வர் ஜெ., நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார்‚ கீழையூர் இரண்டாவது வார்டு அ.தி.மு.க.‚ சார்பில்‚ முதல்வர் நலம்பெற வேண்டி வழக்கறிஞர் உமாசங்கர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்‚ அலங்காரம்‚ மகா தீபாராதனை நடந்தது. நகர செயலாளர் சுப்பு‚ தொழில் அதிபர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். நிர்வாகி முரளி வரவேற்றார். முன்னாள் நகர துணை செயலாளர் அன்பரசு‚ நிர்வாகிகள் கக்கன்‚ தியாகு‚ ரூபன்‚ அழகுவேல்‚ சக்தி உள்ளிட்டோர் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் சிவகாமி‚ லோகநாயகி‚ மலர்‚ மங்கலேஸ்வரி‚ அவிட்டம்‚ ஆவர்ணம்‚ அஞ்சலைதேவி தலைமையில் ஏராளமான மகளிர் விளக்கு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !