ஜெ., பூரண நலம் பெற வேண்டி தொரவியில் சிறப்பு வழிபாடு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாச நாதர் கோவிலில் முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் தமிழக முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி நேற்று காலை 6.௦௦ மணிக்கு, தொரவி அ.தி.மு.க., நிர்வாகி சுப்பிரமணி தலைமையில் கைலாச நாதர் கோவிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி,நடராஜர் உடனுறை சிவகாமி,நந்தீஸ்வரர் ஆகியோருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை புதுவை சிவனடியார் சரவணன் செய்திருந்தார். முன்னதாக சிவனடியார்கள் கோவிந்தராஜன், அர்ச்சனா, அமுதா ஆகியோர் திருவாசகம் முற்றோதினர் . தொரவி ராஜம்மாள் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் ரவி, கிளை செயலாளர் குணசேகரன், மோகன், பாலநாகப்பன், சீனுவாசன், ராஜேந்திரன், மகேஷ் உட்பட கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .