உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினெண்சித்தர் பீடத்தில் கூட்டு பிரார்த்தனை

பதினெண்சித்தர் பீடத்தில் கூட்டு பிரார்த்தனை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பதினெண்சித்தர்பீடத்தில் சித்த பவுர்ணமி கூட்டு பிரார்த்தனை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா பூரணநலம்பெற சித்தர்முறைப்படி ஆயுள் விருத்தியாகம், பீடத்திற்கு மகாஅபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கூட்டுபிரார்த்தனை நடத்தினர். டாக்டர் சக்திவேல், நிர்வாக அறங்காவலர் விஜயபாஸ்கர், ஆயுர்வேத மருத்துவர் ராஜன், அ.தி.மு.க நகர்செயலாளர் பாப்புரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பதினெண்சித்தார்பீட டிரஸ்ட்டி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !