திருமங்கலம் கோவிலில் நவராத்திரி உற்சவம்
ADDED :5190 days ago
திருக்கனூர் : திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது.திருக்கனூர் அடுத்த தமிழக பகுதியான திருமங்கலத்தில் சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 8 நாள் நவராத்திரி திருவிழா துவங்கி, நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் யாகம் வளர்த்து, சகஸ்ரநாமம் வாசித்து, லட்சார்ச்சனையும், கோகிலாம்பிகை, துர்கை, பிடாரி அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அன்னதான அறக்கட்டளை குழுவினர் செய்துள்ளனர்.