உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறாவது நாளில் ‘சட் பூஜை’

ஆறாவது நாளில் ‘சட் பூஜை’

தலை தீபாவளி கொண்டாடும் பெண், கணவன் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் எனும் முறை பஞ்சாபில் உள்ளது. திருமணமான தம்பதிகளின் முதல் தீபாவளியும், குழந்தையின் முதல் தீபாவளியும் மிக முக்கியமானது. பீகாரில், தீபாவளி அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, தீபாவளியின் ஆறாம் நாளான ‘சட் பூஜை’ ஆறு நிலைகள் எனப் பொருள்படும் இந்நாளின் முக்கியத்துவம், சூரியனை ஆறு நிலைகளில் வழிபடுவதாகும். இது, ‘தாலா சட்’ எனவும் அழைக்கப்படுகிறது. கல்கத்தா மற்றும் வங்காளத்தில், காளியை தரிசித்து பூஜித்து தீபாவளியை தொடங்குகின்றனர். காளி மிகவும் உக்கிரமான தெய்வம் என்பதால், அவர் துணையிருந்தால் எல்லா தீய சக்திகளும் அழிபட்டு தொடரும் நாட்கள் இனிதாய் இருக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக தீபாவளி தினத்தன்று புத்தாடையோ அல்லது புதுப் பொருட்களோ வாங்கும் வழக்கம் பெங்காலில் இல்லை. இனிப்புகள் மட்டுமே வாங்கப்படுகின்றன. களிமண் வீடுகள் அதிகமிருக்கும் ஹிமாச்சலில், வீடுகள் சாணத்தால் மெழுகப்பட்டு சுத்தப்படுத்தப்படுகின்றன. பொதுவாக, மூதாதையர்களை நினைவு கூறும் தினமாக, தீபாவளி சிறப்பிக்கப்படுகிறது. சிறுமியர், களிமண் பொம்மைகள் அல்லது பானைகள் செய்து, அதற்கு சிவப்பு நிற வண்ணமிட்டு தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் பரிசளிப்பது வழக்கம்.

ராஜஸ்தானிகளுக்கும், மிகச் சிறப்பான தினமாக தீபாவளி உள்ளது. ராஜஸ்தானிகளின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், பாலாடை கச்சோரி, எள்ளுருண்டை, சோன்பப்டி, ஜிலேபி, பிஸ்தா பர்பி போன்ற பலகாரங்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வினியோகிக்கப் படுகின்றன. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், புதிதாய்ப் பிறந்த ஆண்குழந்தைகளுக்கு, தீபாவளி மிகச்சிறப்பானது. தவிர, குளிர்காலத்தை வரவேற்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !