திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கருவறையில் குளிர்சாதன வசதி!
ADDED :3314 days ago
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படைவீடான திருப்பரங்குன்றம்சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் ரூ.42 லட்சம் செலவில் குளிர்சாதன வசதி செய்யும் பணி நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள வெப்பம் அப்படியே சன்னதிக்குள் இறங்குவதால், கோயிலுக்குள் அதிகளவில் வெப்பம் இருக்கும். இதனால் கோயில் கருவறையில் உபயதாரர் மூலம் ரூ.42 லட்சம் செலவில் நவீன வகை குளிர்சாதனங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.