விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு ேஹாமம்
ADDED :3313 days ago
விருத்தாசலம்: முதல்வர் ஜெ., குணமாக வேண்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. அமைச்சர் சம்பத் தலைமையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று கோ பூஜை, விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து, 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ஜெ., பேரவைச் செயலர் ரவிச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், மாவட்ட சேர்மன் மல்லிகா வைத்தியலிங்கம், மாவட்ட விவசாய அணி காசிநாதன், டாக்டர் சேதுபதி, மாவட்ட கவுன்சிலர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, நகராட்சித் தலைவர் அருளழகன் செய்திருந்தார்.