உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 4 ஆண்டுகளாக பூட்டி கிடந்த சர்ச் திறப்பு

4 ஆண்டுகளாக பூட்டி கிடந்த சர்ச் திறப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் கோஷ்டி பிரச்னையால் 4 ஆண்டுகளாக பூட்டி கிடந்த சர்ச், கோஷ்டியினர் சுமூக உடன்பாடால் திறக்கபட்டது. ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோட்டில் துாய ஆவியானவர் சர்ச் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஓடைக்காலை சேர்ந்த தலித் கிறிஸ்துவ மாணவர் மைக்கேல்ராஜூக்கு குருபட்டம் வழங்காததால் சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகத்திற்கும், தலித் கிறிஸ்துவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக சர்ச் பூட்டபட்டிருந்தது. சர்ச் பூட்டபட்டதையடுத்து, சிவகங்கை மறைமாவட்டத்திற்கு எதிராக தலித் கிறிஸ்துவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சுமூக உடன்பாடால் பூட்டி கிடந்து, முள் புதர்களால் சூழந்த சர்ச் போலீசார் பாதுகாப்புடன் சுத்தம் செய்து, முதன்மை குரு ஜோசப் லுார்துராஜா திருப்பலி செய்து திறக்கபட்டது. திருவாடானை டி.எஸ்.பி., மெக்லரின் எஸ்கால், ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் பாதுகாப்பு வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !