உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டவிழா நவ. 2ல் துவக்கம்

கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டவிழா நவ. 2ல் துவக்கம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா நவ.2ல் துவங்குகிறது, நவ. 9ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. இங்குள்ள முத்தாலம்மனை மழைக்கு அதிபதியாக அப்பகுதியினர் வணங்குகின்றனர். ஐப்பசியில் ஒருவாரம் முழுவதும் விழா நடத்தி, தேரோட்டத்துடன் வழிபடுவர். விழா காலத்தில் கலைவிழா நடைபெறும். இதில் இயல், இசை, நாடகம் என பல்சுவை கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும். விழாவின் ஏழாம் நாளில் அம்மன் தேரில் எழுந்தருளி வீதியுலா சென்று அருள்பாலிப்பார். பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகளை உள்ளடக்கிய இவ்விழா நவ. 2ல் கலைவிழாவுடன் துவங்கி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இறுதி நாளான நவ.9ல் தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள், விழாக்குழுவினர், ஆசிரியர் மற்றும் அரசுப் பணியாளர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !