ஆனைமலை ரங்கநாதப்பெருமாள் கோவிலில் குபேரர் பூஜை
ADDED :3300 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் கோவிலில், லட்சுமி குபேரர் சிறப்பு பூஜை நடந்தது. ஐப்பசி மாத அமாவாசையையொட்டி ஆண்டுதோறும் இப்பூஜை நடத்தப்படுகிறது. இதுபோன்று இந்தாண்டும் நடத்தப்பட்டது. விழாவையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாளுக்கு அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.