உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் கந்த சஷ்டி கொடியேற்றம்

திருமலைக்கேணியில் கந்த சஷ்டி கொடியேற்றம்

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம் நடந்தது. காலை 10 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. இதை தொடர்ந்து கந்தசஷ்டி மகாதேசவ திருக்கொடி ஏற்றப்பட்டு திருமுகாற்றுப்படை, செந்தமிழ் வேள்வி, லட்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பகலில் ராஜ அலங்காரத்தில் சுவாமி திருவுலா நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தினமும் சிவபூஜை திருக்காட்சி, சிவ உபதேசம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி, வேல்வாங்கும் காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நவ.,5 அன்று முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. செங்குறிச்சி ஜமீன்தார் சுந்தரவடிவேல் ராஜா, பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !