உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

வால்பாறை :வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நான்காவது ஆண்டாக இக்கோவிலில் நடத்தப்படும் இவ்விழா நேற்று காலை, 8.00 மணிக்கு கணபதிேஹாமத்துடன் துவங்கியது.முன்னதாக உற்சவருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் நடத்தப்பட்டது.அதன்பின் காலை, 10:50 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிகம்பத்துக்கு சிறப்பு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு திருக்கொடியை ஏற்றினார். விழாவில், 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை வாழைத்தோட்டம் காமாட்சிஅம்மன் கோவிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்படுகிறது.விழாவில் வரும், 5ம் தேதி எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலிருந்து, சண்முகர் பராசக்தி அன்னையிடம் இருந்து சக்திவேல் வாங்கி, மாலை 3:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் சூரசம்ஹார பெருவிழா நடக்கிறது. அதனை தொடர்ந்து வரும், 6ம் தேதி மாலை, 3:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணமும், வரும், 7ம் தேதி மதியம், 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது.மாலை, 6.00 மணிக்கு முருகன் தேவியருடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !