உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்

தேனி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்

தேனி : மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். தேனி: தேனி கணேச கந்த பெருமாள் கோயில், வேல்முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில், கந்த சஷ்டிவிழா காப்புகட்டுதல், மூலவருக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது. தினமும் மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார்.

விரதம் துவக்கினர்: ஏராளமான பக்தர்கள், காப்பு கட்டி ஏழுநாள் விரதம் துவக்கினர். நவ.,5 மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம், நவ.,6ல் பாலசுப்பிரமணியசுவாமி, தெய்வானை, வள்ளியுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம் , மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 19 வது ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, காலையில் சுவாமிக்கு பால் அபிஷேகத்தைத் தொடர்ந்து, சர்வ அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதத்தைத் துவக்கினர். தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் விழாவில், தினந்தோறும் காலையில் சமய சொற்பொழிவு நடைபெறும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் , ஏழாம் நாளில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !