பஞ்சலிங்க கோவில் கும்பாபிஷேக விழா
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த காட்டூரில் பஞ்சலிங்க கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.பி.காட்டூரில், பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமி பூஜையன்று நடந்த கற்பூர ஆராத்தி நிகழ்ச்சியில், தீக்கொளுந்தில் காளியம்மன் தோன்றியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இக்கோவிலில் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மண் ஆகிய பஞ்சலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா இன்று காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. காலையில், காவிரி தீர்த்தம், மதியம் சுவாமி பிரதிஷ்டை, மாலை யாககால பூஜை ஆகியவை நடக்கிறது. நாளை காலை, கடம் புறப்பாடும், 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர்தலைவர் பாரதி, மணியக்காரர் கதிர்வேல் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.