மூல நட்சத்திர திருமஞ்சனம்: முன்பதிவு செய்ய அழைப்பு
ADDED :3297 days ago
ஈரோடு: மகாவீரர் ஆஞ்சநேயர் கோவிலில், மூல நட்சத்திர திருமஞ்சனம் நடக்கிறது.ஈரோடு வ.உ.சி., பூங்காவில், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் நடக்கிறது. வரும், 4ல் மூல நட்சத்திர திருமஞ்சனம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.