சங்கமேஸ்வரர் கோவிலில் தற்காலிக கடைகள் ஏலம்
ADDED :3297 days ago
பவானி: சங்கமேஸ்வரர் கோவிலில், தற்காலிக கடைகளுக்கான, ஏலம் நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவில், சுற்றுவட்டார பகுதிகளில், 55 தற்காலிக கடைகள் உள்ளன. இவற்றுக்கான ஏலம் நேற்று நடந்தது. வரும், 17 முதல், ஜன., 18ம் தேதி வரை கடைகளை நடத்திக் கொள்ளலாம்.கோவை, மருதமலை சுப்ரமணியர் கோவில் துணை ஆணையர் பழனிகுமார், பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ராஜா முன்னிலை வகித்தனர். இதில், 42 கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன. மொத்தம், ஆறு லட்சத்து, 6,800 ரூபாய்க்கு ஏலம் போனது. மீதி, 13 கடைகள் ஏலம் போகவில்லை. கடந்த ஆண்டு, 55 தற்காலிக கடைகளில், 46 கடைகள், 6.45 லட்சத்துக்கு ஏலம் போனது.