மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ADDED :3296 days ago
ராசிபுரம்: கோனேரிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் அடுத்த, கோனேரிப்பட்டி சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா, ஒரு வாரத்திற்கு முன் பூ போடப்பட்டு துவங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், கங்கணம் கட்டிக்கொண்டு பக்தியை கடைபிடித்தனர். சின்ன மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று முன் தினம் இரவு, மாரியம்மன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக உலாவாக எடுத்து வந்தனர். நேற்று காலை, 5:00 மணிக்கு, அக்னி குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது. பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். சுற்று வட்டாரத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.