படுக்கை அறையில் கடவுள் படங்களை மாட்டி வைப்பது சரியா?
ADDED :3294 days ago
தப்பில்லை... வைக்கலாம். சிலர், அது படுக்கும் இடமாச்சே, அங்கே சுவாமி படத்தை வைத்துக் கொண்டால் அது தோஷமாகாதா? என்று நினப்பார்கள். பகவானின் நினைவு எந்த விதத்திலும் எந்த இடத்திலும் வரவேண்டும். விழித்திருக்கும் நேரத்திலோ, படுக்கப் போகும் நேரத்திலோ, பகவானை நாம் பார்ப்பது, நினைப்பது என்பது உயர்வுதானே. எனவே, இதை தோஷம் என்று சொல்ல முடியாது.