மாமுனிவர் அவதார தினம்
ADDED :3457 days ago
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிவரின் 647வது அவதார தினம் நடந்தது. பெருமாள், பத்மாஸனித் தாயார், பட்டாபிஷேக ராமர், தெர்ப்ப சயன ராமர், ராமானுஜர் சன்னதிகளில் மங்களாசனம், திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம், வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.