உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் கந்தசஷ்டி விழா!

திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் கந்தசஷ்டி விழா!

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர், சனீஸ்வர பகவான் கோவில் நேற்று முன்தினம் சூரசம்ஹாராம் நிகழ்ச்சி நடந்தது.இக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகப்பெருமாளுக்கு பலவகையான திரவாங்களால் ஆபிஷேகம் நடைபெற்றது.பின் அம்பாளிடம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வேல் வாங்கு நிகழ்ச்சி நடந்தது.பின் கோவில் எதிரே உள்ள வீதியில் முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் முன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தார்.பின் முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து மகா தீபாரதனைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,கட்டளை தம்பிரான் சுவாமி மற்றும் 100க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுப்போல் காரைக்கால் கைலாசநாதர் கோவில்,பார்வதிஸ்வரர் கோவில்,திருப்பட்டினம் இராஜசோளீச்சுரர் கோவில்,கோட்டுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !