மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் துலா உற்சவம்
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். துலா மாதமான ஐப்பசி மாதத்தில் சிவபெருமானின் அனுக்கிரகத்தின் படி கங்கை உள்ளிட்ட புன்னிய நதிகள் அனைத்தும் இந்த காவிரி துலா கட்டத்தில் புனிதநீராடி தங்களது பாவத்தை போக்கிக்கொண்டது ஐதீகம். அதனால் இம்மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடினால் பாவம்தீரும் என்பதால் தமிழம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் நீராடி வரு கின்றனர். துலா உற்சவம் மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர் கோயிலில் நேற்று இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனை முன்னிட்டு 11 முதல் 12மணி வரையிலான சுபநேரத்தில் கோயில் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நமச்சிவாயா என கோஷமிட் டு சிவபெருமானை வழிபட்டனர். இது போல வதான்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அய்யாரப்பர், பரிமளரங்கநாதர் கோயில்களிலும் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து துலா உற்சவத்தின் முக்கிய விழாவான 12ம் தேதி திருக்கல்யாணமும், 14ம் தேதி தேரோட்டமும், 15 ம் தேதி கோயில்களில் இருந்து சுவாமிகள் காவிரி ஆற்றங் கரையில் எழுந்தருள, அஸ்திர தேவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும் கடைமுக தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.