சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் பூஜை
ADDED :3294 days ago
கிணத்துக்கடவு : சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு முன்பாக கும்பாபிேஷகமும், தொடர்ந்து, தேரோட்டமும் நடந்தன. வாரத்தில், செவ்வாய், வெள்ளி மற்றும் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்து வருகிறது. அதன்படி கடந்த 4ம் தேதி காலை, 7:30 மணிக்கு சுயம்பாக உள்ள மாரியம்மனுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் போன்றவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டது. சுயம்பு மாரியம்மனுக்கு பின்புறம் உள்ள மாரியம்மன் சிலைக்கு மஞ்சள் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.