உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலகுமலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

அலகுமலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பொங்கலூர் : பொங்கலூர், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில், கந்தர் சஷ்டி விழாவை, முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினம் முருகப்பெருமான், தாயிடம் பத்மாவதி பெற்ற வேலால், சூரன்களை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு பாலதண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சிவாச்சார்யார்கள் வேத மந்திரம் முழங்க, திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். விழாவையொட்டி, பெண்களுக்கு, திருமஞ்சன கயிறு வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு, கல்யாண விருந்து அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, முருகப்பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !