பொள்ளாச்சி கோவிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்
பொள்ளாச்சி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், முருகப்பெருமான், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடந்தது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா கடந்த 31ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்றுமுன்தினம் சிவபெருமானிடமிருந்து சுப்பிரமணியசுவாமி வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு, சூரசம்ஹாரத்திருவிழா நடந்தது. சுவாமி திருக்கோவிலிருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, எஸ்.எஸ்., கோவில் வீதி கிழக்கு வழியாக சென்று, சத்திரம் வீதியும், தெப்பக்குளம் வீதியும் சந்திக்கும் சந்திப்பில், முதல் சூரன் கஜமுகா சூரன் வதையும்.
தெப்பக்குளம் வீதி வழியாக சென்று தெப்பக்குளம் வீதியும், வெங்கட்ரமணய்யர் வீதியும் சந்திக்கும் இரண்டாவது சூரன் சிங்கமுகாசூரன் வதையும் நடந்தது. வெங்கட்ரமணய்யர் வீதியும், ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் மூன்றாவது சூரன் பானுகோபன் வதையும்; உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையத்தில் நான்காவது சூரன் சூரபத்மன் வதையும் நடைபெற்று, பின்னர் மீண்டும் திருக்கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், முருகப்பெருமான், சூரனை வதம் செய்தனர். அப்போது, பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பியபடி, வதம் செய்யும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அன்ன ஆகாரமின்றி விரதமிருந்து, சூரசம்ஹாரம் முடிந்து, வாழைத்தண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, கொய்யா, வெள்ளரிக்காய் போன்ற பழங்கள், தயிர், கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை முதலியவற்றை கொண்டு, பிரசாதம் தயாரித்து, சுப்பிரமணிய சுவாமிக்கு படைத்து விரதத்தை முடித்தனர். தண்டு விரதம் இருக்கும் பழக்கம், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாகும். தொடர்ந்து, நேற்று காலை 10:00 மணிக்கு மகா அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு திருகல்யாண உற்சவமும் நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு