பெரியாண்டவர் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3295 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் சந்தைதோப்பு அருகே உள்ள பெரியாண்டவர் அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 3ம் தேதி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 4ம் தேதி கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதியை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 10.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.