உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறுபடை வீடு முருகன் கோவில் சூரசம்ஹார விழா கோலாகலம்

ஆறுபடை வீடு முருகன் கோவில் சூரசம்ஹார விழா கோலாகலம்

சென்னை: பெசன்ட் நகர், ஆறுபடை வீடு முருகன் கோவிலில், நேற்று நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானை வழிபட்டனர். பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனியில், ஆறுபடை வீடுகளில் உள்ள முருகக் கடவுளரை ஒரே இடத்தில் காணும் வகையில், முருகன் கோவில் அமைந்துள்ளது. கடந்த, அக்., 31 முதல் அங்கு, கந்தசஷ்டி விழா துவங்கியது. நேற்று, சூரசம்ஹார விழா நடந்தது. இதில், மாலை, 4:00 மணிக்கு தீய சக்திகளை, நல்ல சக்திகள் அழிக்கும் விதமாக, முருகன், அசுரனை வீழ்த்தும் நிகழ்ச்சி நடந்தது. வேல் எடுத்த முருகன், மாமரத்தை இரண்டாக பிளந்து, அசுரனை மயிலாகவும், சேவலாகவும் உருவெடுக்க வைத்து, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் மாற்றி வெற்றி முழக்கமிடப்பட்டது. பின், வெள்ளி மயில் வாகனத்தில், முருகன் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நிகழ்ச்சியாக, இன்று காலை, 6:00 மணிக்கு தேவசேனை திருக்கல்யாணம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !