உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலையத்துறை வசமாகிறது பத்ரகாளியம்மன் கோவில்

அறநிலையத்துறை வசமாகிறது பத்ரகாளியம்மன் கோவில்

திருப்பூர் ·: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள பத்ரகாளியம்மன் கோவிலை, அறநிலையத்துறை வசம் கொண்டு வர, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. திருப்பூர், காலேஜ் ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகில், நூற்றாண்டு பழமைவாய்ந்த, ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் <உள்ளது. அதிக வருவாய் <உள்ள இக்கோவில், தனியார் வசம் உள்ளதோடு, உண்டியல் வைத்தும், நகை, பணம் நன்கொடை பெற்று, முறைகேடு நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பக்தர்கள் தரப்பில், அரசு மற்றும் அறநிலையத்துறை கமிஷனருக்கு, புகார்கள் சென்றன. இதையடுத்து, ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் சொத்து, பக்தர்கள் வழங்கும் காணிக்கை உள்ளிட்டவற்றை முறைப்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கும் வகையில், அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ், கொண்டு வர அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், வரும், 11ம் தேதி, உதவி ஆணையர் ஹர்சினி முன்னிலையில், கோவிலில் விசாரணை நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்கவும், முறைகேடு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என அறிவித்து, கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ‘நோட்டீஸ்‘ ஒட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !