உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருவயல் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாணம்

பெருவயல் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாணம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம், பெருவயல் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, பெருவயல் ரணபலி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா அக்., 31ல் காப்பு கட்டுடன் துவங்கியது. இதைமுன்னிட்டு சுவாமிக்கு தினமும் அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, உள் பிரகாரங்களில் சுவாமி வீதி யுலா நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், பாராயணம் நடந்தது. இக்கோயில்களில் நவ., 5ல் நடந்த சூரசம்ஹாரத்தில் சூரனை முருகன் வதம் செய்தார். ஏழாம் நாள் நிகழ்வாக இக்கோயில்களில் முருகனுக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழு, கந்த சஷ்டி பாராயணக் குழுவினர் செய்தனர்.

*சாயல்குடி வள்ளி தேவசேனா சமேத வழிவிடுமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த அக்., 31ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை 9 முதல் 10:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருச்செந்துார் பாதயாத்திரை விழாக்கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !