உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்

நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்

தொடுகாடு: தொடுகாடு ஊராட்சியில் உள்ள, வேணுகோபால நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், நேற்று, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட நமச்சிவாயபுரம். இங்குள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், மகா சம்ப்ரோக்ஷணம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த, 4ம் தேதி மாலை புண்யாகவாசனம், அங்குரார்பணம் நிகழ்ச்சிகளுடன் மகா சம்ப்ரோக்ஷணம் துவங்கியது. பின், நேறறு முன்தினம் காலையில், மகா கும்பஸ்தானமும், பூர்ணாஹூதியும், சாற்று முறையும் நடந்தது. பின், அன்று மாலை, 17 கலச ஸ்நபன திருமஞ்சனமும், சதுஸ்த்தாணார்ச்சனமும், நடந்தது. பின், நேற்று காலை, விஸ்வரூபமும், சாந்தி ஹோமமும், மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கும்ப புறப்பாடும் நடந்தது. அதன்பின், காலை 10:15 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீரால் மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. அதன்பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சுவாமி வீதிஉலாவும் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !