உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்ராம் தியான பீடத்தின் 17ம் ஆண்டு விழா

சாய்ராம் தியான பீடத்தின் 17ம் ஆண்டு விழா

பெரும்பாக்கம்: பெரும்பாக்கத்தில் உள்ள, ஸ்ரீலோகசாய்ராம் தியானபீடத்தின், 17வது ஆண்டு விழா, நாளை நடக்க உள்ளது. சென்னை, பெரும்பாக்கம், சவுமியா நகரில், ஸ்ரீ லோக சாய்ராம் தியான பீடம் அமைந்துள்ளது. அதன், 17வது ஆண்டு விழா, நாளை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, இன்று மாலை, 4:30 மணிக்கு, உஷா - ஆஷா சகோதரிகளின், சாய் பஜனை கச்சேரி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீசாய் பல்லக்கு ஊர்வலத்தை தொடர்ந்து, சிவா வழங்கும் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறும். நாளை காலை, 5:30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 6:30 மணிக்கு, லட்சார்ச்சனையும் நிகழ உள்ளது. 11:30 மணிக்கு, மகா அன்னதானமும், மாலை, 6:30 மணிக்கு, சாய்பாபாவிற்கு மகா ஆர்த்தியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !