பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சத்துரு சம்ஹார யாகம்
ADDED :3296 days ago
புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சத்துரு சம்ஹார யாகம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும், கற்பதோஷம் நீங்கவும், 16 செல்வங்கள் பெறவும், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், புத்திர சந்தானம் பெறவும், கண்திருஷ்டி அலகவும் வேண்டி சத்துரு சம்ஹார யாகம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், 8:00 மணிக்கு லட்சுமி ஹோமம், குபேர பூஜை நடந்தது. 10:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி திரிசதி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை, 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.