உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரும்பை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

இரும்பை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வானுார்: இரும்பை மகாகாளீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் நடந்தது. திருச்சிற்றம்பலம் அடுத்த பிரசித்தி பெற்ற இரும்பை மகாகாளீஸ்வரர் கோவிலில் உள்ள முருக பெருமானுக்கு நேற்று முன்தினம், திருகல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு முருக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில், மூலவர் மற்றும் பிரகார மூர்த்தியை வலம் வந்தார். பின்னர், 7:30 மணிக்கு அக்னி குண்டம் வேள்வி நடந்தது. பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இரவு 9:00 மணிக்கு முருக பெருமானுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்துக் கொண்டு சுவாமி, தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !