உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குமாரபாளையம்: படைவீடு பகுதியில், அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. குமாரபாளையம் அடுத்த, படைவீட்டில் அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நவ., 5 காலை கணபதி பூஜை நடத்தப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வரப்பட்டன. படைவீடு சர்வ சாதகர் நடராஜா குருக்கள் தலைமையில், முதல் கால பூஜைகள் நடந்தன. மறுநாள், இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடந்து, கோபுர கலசத்துக்கு, காலை, 7:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அத்தனூர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !