வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3364 days ago
இடைப்பாடி: வீரப்பம்பாளையம், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று, கோலாகலமாக நடந்தது. இடைப்பாடி, வீரப்பம்பாளையத்தில், சக்திமாரியம்மன், காளியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. அக்கோவில்களின் கட்டட பணி முடிந்து, நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. அதற்காக, கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டன. அதில், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.