உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பவானி: பவானி, கவுந்தப்பாடி, சலங்கபாளையம் கவுண்டம்பாளையம் காமாட்சியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. காலை, 6:15 மணிக்கு காமாட்சியம்மன், வலம்புரி விநாயகர், முத்துக்குமார சுவாமி, கக்குமலை ஆண்டவர், மற்றும் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கவுந்தப்பாடி, சலங்கபாளையம், கவுண்டம்பாளையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், விழாவில் கலந்து கொண்டனர்.

* இதேபோல், பெருந்துறையை அடுத்துள்ள, பெரியவேட்டுவபாளையத்தில், வெள்ளை விநாயகர் மற்றும் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !